Showing posts with label The Capital of Japan.. Show all posts
Showing posts with label The Capital of Japan.. Show all posts

Monday, 26 July 2021

Tokyo

                                   Tokyo

டோக்கியோ ஜப்பான் நாட்டின் கிழக்கு தலைநகரமாகும்.

ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோ முன்பு "எடோ " என்று அழைக்கப்பட்டுவந்தது.

டோக்கியோ ஜப்பானின் 4 முக்கிய தீவுகளில் ஒன்றான ஹொன்ஷூ தென்கிழக்கு பகுதியில் கண்டோ மண்டலத்தில் உள்ளது.

19 -ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் நகரின் பெயர் டோக்கியோ என்று மாற்றப்பட்டது.

1868-ஆம் ஆண்டுமுதல், இந்நகரம் ஜப்பான்-ன்  தலைநகரமாக உள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் வாழும் மெட்ரோபாலிட்டன் நகரமாக டோக்கியோ உள்ளது. இங்கு 3.8 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

வெளிநாட்டு மக்கள் இந்நகரில் வரியில்லாமல் பொருட்களை வாங்க முடியும்.

வானிலை தெளிவாக உள்ள நாட்களில், இந்நகரில் இருந்து "பியூஜி"மலையை தெளிவாக பார்க்க முடியும்.

அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால்,  அவற்றை தாங்கும் வகையில் இங்குள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2-ஆம் உலகப்போரின்போது 2 நாட்களில் நடந்த குண்டுவீச்சில் மட்டும் டோக்கியோவைச் சேர்ந்த 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ளதைப்போன்று டோக்கியோ நகரிலும் டிஸ்னிலேண்ட் (Disneyland) பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.

டோக்கியோ நகரில் மொத்தம் 150 அருங்காட்சியகங்கள் (Museum) உள்ளன.

100-கும் மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்குள்ளன.

 

              Emblem of Tokyo மெட்ரோபோலீஸ்