TAMIL THAGAVAL BLOG
Tuesday, 14 November 2023
2023 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்தியா சாதனை...!!!
Thursday, 9 November 2023
பாக்கிஸ்தானின் 2023 கிரிக்கெட் உலக கோப்பை கனவை உடைத்த நியூஸிலண்ட்.
Sunday, 5 November 2023
இந்தியாவின் மிரட்டலான சுழர்பந்துவீச்சில் சுழன்று வீழ்ந்தது தென் ஆப்பரிக்கா அணி...
Friday, 3 November 2023
2023 கிரிக்கெட் உலக கோப்பையில் அறை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.
பட்டாம்பூச்சிகள் பலவிதம்

- பட்டாம்பூச்சிகளால் மணிக்கு 12 மைல் முதல் 25 மைல் வேகத்தில் பறக்க முடியும்.
Saturday, 31 July 2021
Mango
🥭மாம்பழம் 🥭
மாம்பழம் என்பது மாமரம் எனும் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு பழவகையாகும்.இவை நமக்கு பழமாகவும் பழச்சாராகவும் கிடைகின்றன.
மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் உள்ள முக்கனிகள் ஆகும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பழமாக மாம்பழம் உள்ளது.
'மேங்கோ' (Mengo) என்ற ஆங்கில பெயர் 'மாங்காய்' என்ற தமிழ் சொல்லில் இருந்து உருவானதாகும்.
மாம்பழம் பண்டைய தமிழகத்தின் முக்கனிகளுள் ஒன்றாகும். இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன.
கி.பி.1800 களில் ஆங்கிலேயர்களால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாமரங்கள் காய்ப்பதற்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும்.
மாமரங்கள் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வரை பழங்களைத் தரும்.
உலகிலேயே இந்தியாவில்தான் மாம்பழங்கள் அதிகமாக விளைன்றன(உலக அளவில் பாதிக்கும் மேல்). இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மாம்பழங்கள் விளைகின்றன.
புத்தர் மாமரங்களின் கீழ் அமர்ந்து ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், அம்மரத்தை புத்த மதத்தினர் புனிதமாகக் கருதுகின்றனர்.
மாம்பழங்களால் கவரப்பட்ட மாவீரன் அலெக்சாந்தர், தன்னுடன் நிறைய மாம்பழங்களை கிரக்க நாட்டுக்கு எடுத்துச்சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே மாமரங்களை வளர்க்க வேண்டும் என்ற விதி இருந்தது. பின்னர் இந்தத் தடையை மன்னர் 'ஷாஜகான்' நீக்கினார்.
2010 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் தேசிய மரமாக மாமரம் அறிவிக்கப்பட்டது.
பயன்பாடு
மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது மற்றும் ஐஸ் கிரீம் செய்யப்பயன்படுகிறது.
மாம்பழக்கூல் தயாரிக்கப்பட்டு பருகப்படுகிறது.மாம்பழத்தையும் தயிரையும் சேர்த்து மாம்பழ லஷ்லி தயாரிக்கப்படுகிறது.
Monday, 26 July 2021
Tokyo
Tokyo
டோக்கியோ ஜப்பான் நாட்டின் கிழக்கு தலைநகரமாகும்.
ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோ முன்பு "எடோ " என்று அழைக்கப்பட்டுவந்தது.
டோக்கியோ ஜப்பானின் 4 முக்கிய தீவுகளில் ஒன்றான ஹொன்ஷூ தென்கிழக்கு பகுதியில் கண்டோ மண்டலத்தில் உள்ளது.
19 -ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் நகரின் பெயர் டோக்கியோ என்று மாற்றப்பட்டது.
1868-ஆம் ஆண்டுமுதல், இந்நகரம் ஜப்பான்-ன் தலைநகரமாக உள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் வாழும் மெட்ரோபாலிட்டன் நகரமாக டோக்கியோ உள்ளது. இங்கு 3.8 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
வெளிநாட்டு மக்கள் இந்நகரில் வரியில்லாமல் பொருட்களை வாங்க முடியும்.
வானிலை தெளிவாக உள்ள நாட்களில், இந்நகரில் இருந்து "பியூஜி"மலையை தெளிவாக பார்க்க முடியும்.
அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், அவற்றை தாங்கும் வகையில் இங்குள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
2-ஆம் உலகப்போரின்போது 2 நாட்களில் நடந்த குண்டுவீச்சில் மட்டும் டோக்கியோவைச் சேர்ந்த 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ளதைப்போன்று டோக்கியோ நகரிலும் டிஸ்னிலேண்ட் (Disneyland) பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.
டோக்கியோ நகரில் மொத்தம் 150 அருங்காட்சியகங்கள் (Museum) உள்ளன.
100-கும் மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்குள்ளன.
Emblem of Tokyo மெட்ரோபோலீஸ்



