ஈடன் மைதானத்தில் இன்று
(05.11.2023) நடந்த 37 வது லீக் சுற்றில் இந்தியா தென் ஆப்ரிகாவை எதிர்கொண்டது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் தொடக்க
ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்து
ககிசோ ரபடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி நேர்த்தியாக
விளையாடி 121 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். சுப்மன் கில் 24 பந்துகளில் 23
ரன்களை எடுத்து கேஷவ் மகாராஜிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் . அடுத்து வந்த ஸ்ரேயாஸ்
ஐயர் தனது நேர்த்தியான ஆட்டத்தால் 87 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். முதல் சுற்று
ஆட்டத்தின் முடிவில் இந்தியா 50 ஓவர்களுக்கு 326 என்ற இலக்கை தென் ஆப்பரிக்க
அணிக்கு நிர்ணயித்தது.
அடுத்து வெற்றியை நோக்கி கலமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 327 என்ற இலக்கை நோக்கி
ஆட ஆரம்பித்தது. தொடக்கத்திலே 10 பந்துகளில் 5 ரன்களை எடுத்து முகமது சிராஜ்
வீசிய பந்தில் பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தார் தென் ஆப்ரிக்காவின்
நம்பிக்கை வீரர் குயுங்டோன் டி காக்.
பின்பு அடுத்து அடுத்து வந்த வீரர்கள் ஓரிலக்க ரன்களில் ஆட்டமிழந்து
அதிர்ச்சியை கொடுத்தனர். இறுதியாக தென் ஆப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும்
இழந்து 27.1 ஓவர்களில் 83 ரன்களை எடுத்து படுதோல்வியை சந்தித்தது.
தனது பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணி பந்து வீச்சாளர்கள் தென் ஆப்ரிக்க
அணியை மிக சுலபமாக வீழ்த்தினர். பும்ரா கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்களை
கட்டுப்படுத்தினார். முஹம்மது சிராஜ் மிரட்டலான பந்து வீச்சால் 1 விக்கெட்டை
வீழ்த்தினார். ஜடேஜா தனது மாயஜால பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகம்மத் சமி மற்றும் குள்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டி முடிவில் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபார
வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று
நிகர ரன் ரேட் +2.456 பெற்று தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி
வருகிறது. 2 ஆம் இடத்தில் தென் ஆப்பரிக்க அணியும் உள்ளது. இரண்டு அணிகளும் அறை
இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அடுத்து வரும் போட்டிகளில் இதே போன்று
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா கோப்பையை வெல்லுமா??? பொறுத்திருந்து
பார்ப்போம். இணைத்திருங்கள் tamilthagaval உடன்.