முதலில் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசல் பரேரா 51 ரன்களை எடுத்தார். பந்து வீசிய ட்ரென்ட் போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவதாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலேண்ட் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 23.2 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து புள்ளி பட்டியலில் 4 வது இடத்தை பிடித்தது.அதிகபட்சமாக டெவோன் காண்வே 45 ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் எஞ்சேலோ மாத்தேவ்ஸ் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
சரி நியூஸிலேண்ட் கிட்டத்தட்ட 4 வது இடத்தை பிடித்துவிட்டது. இன்னும் ஒரு விளையாட்டு விளையாடாமல் இருக்கும் பாக்கிஸ்தானுக்கு வாய்ப்புகள் இருக்கிறதா அறை இறுதிக்கு செல்ல? சிறிது வாய்ப்பு உள்ளது ஆனால் அது கடினமானதும் கூட. அடுத்த போட்டி பாகிஸ்தான் அணி வரும் 11 தேதி அன்று கொல்கத்தா மைதானத்தில் தனது லீக் சுற்றின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இதில் நியூஸிலேண்ட் நிகர ரன் ரேட் +0.74, பாகிஸ்தான் +0.75 ரன்களை எட்ட வேண்டுமானால், முதலில் பேட் செய்தால் 287 அல்லது 288 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். முதலில் பந்துவீசினால், பாகிஸ்தான் 284 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை துரத்த வேண்டும்.இருப்பினும், பாகிஸ்தான் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது காட்சிகள் கற்பனையானவை. எனவே, அது விட்டுக்கொடுக்கும் ரன்களுக்கு ஏற்ப பந்து வீச்சுகள் மாறும்.
எனவே பாக்கிஸ்தானிற்கு அடுத்த வரவிருக்கும் போட்டி மிக முக்கியமானதாகும். பாக்கிஸ்தானின் அறை இறுதி கனவு பழிக்குமா அல்லது என்ன நடக்கும்? இணைத்திருங்கள் தமிழதகவலுடன்...