Showing posts with label 2023 cricket word cup/ India vs Newzeland/ india vs Netherlands/ Shreyas Ayyer/ KL Rahul. Show all posts
Showing posts with label 2023 cricket word cup/ India vs Newzeland/ india vs Netherlands/ Shreyas Ayyer/ KL Rahul. Show all posts

Tuesday, 14 November 2023

2023 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்தியா சாதனை...!!!

ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் இதுவரை நடந்த உலக கோப்பை தொடர்களில் முதல்  முறையாக லீக் சுற்றுகளில் அனைத்து போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் சதங்களால் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை எடுத்தது. 410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியால் 47.5 ஓவர்களில் 250 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
நெதர்லாந்து அணியில் டி நிதமானரு அதிகபட்சமாக  39 பந்துகளில் 54 ரன்களை எடுத்து இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார்.
லீக் சுற்றின் இறுதிபோட்டியில் விளையாடிய இந்தியா குறிப்பிடத்தக்க சில சாதனைகளை செய்தது. 1 முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா தனது அதிரடி பாணியில் விளையாடி 54 பந்துகளில் 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சுப்பிமான் கில் 32 பந்துகளில் 51 ரன்களும் விராட் கோலி 56 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். தொடர்ச்சியாக களமிறங்கிய மூவரும் அறை சதம் அடித்து சாதனை படைத்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 94 பந்துகளில் 128 ரன்களையும் கே எல் ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களையும் எடுத்தனர்.
410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்தியா அணி சார்பில் சோதனை முறையில் முதல் முறையாக ஒன்பது பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது இதனை ரோஹித் சர்மா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதில் பும்ரா, முகம்மது சிராஜ், குள்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து வரவிருக்கும் முதல் அறையிறுதி போட்டியில் இந்தியா நியூஸிலேண்ட் ஐ சந்திக்கவுள்ளது. இதுவரை உலக கோப்பை அறையிறுதியில் 2 முறை இந்தியா நியூசுலாந்திடம் தோற்றுள்ளது. எனவே இந்தமுறை இந்தியா தனது சொந்த மண்ணில் முழு பலத்துடன் மும்பை வாங்கடே மைதானத்தில் 15.11.2023 அன்று எதிர்கொள்ள உள்ளது...சாதனை படைக்குமா இந்தியா...? படைக்கும்....