இதே போன்று இந்தாண்டு நடந்து முடிந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியிலும் வெறும் 50 ரன்களை எடுத்து படுதோல்வி அடைந்து கோப்பையை இழந்தது இலங்கை.
போட்டி சுருக்கம்.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியாவின் அபார ஆட்டத்தால் 357 ரன்களை எடுத்தது. எதிர்பாராதவிதமாக ரோஹித்சர்மா 4(2) களில் மதுசனாகவிடம் முதல் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த விராட் கோழி 88 (94) ரன்கள், சுப்மன் கில் 92 (92) ரன்களை எடுத்து மதுசனாகவிடம் விக்கெட்டை இழந்தனர். பின் கலமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 82 (56) ரன்களை எடுத்து மதுசனாகவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் கில், கோழி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மூவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டனர்.
இரண்டாவதாக விளையாடிய இலங்கை அணி முதல் பந்திலேயே பும்ராவிடம் விக்கெட்டை இழந்து மிக சோகமான தொடக்கத்தை தொடர்ந்தது. அடுத்துவந்த சிராஜ் பந்துவீச்சில் தொடக்க ஆட்ட வீரர்கள் இருவரும் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிராஜ் இன் அபார பந்துவீச்சில் இலங்கை அணி மிகவும் தடுமாறியது. சிராஜ் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார் (டில்சன் கருணாரத்தினே, குசல் மெண்டிஸ் மற்றும் samaravikrame). இந்த புயல் அடங்குவதற்குள் அடுத்து வந்த முஹம்மது சமி அடுத்து அடுத்து 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியாக ஜடேஜா வீசிய 4 வது பந்தில் இறுதி விக்கெட்டை இழந்து இலங்கை 55 ரன்களில் படுதோல்வியை பதிவு செய்தது.
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மதுஷனக்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா தரப்பில் பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளும் சிராஜின் மிக நேர்த்தியான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளையும், கொரதாண்டவம் ஆடிய சமி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் சமி இந்தியாவிற்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்தார். தனது மேஜிக் பந்துவீச்சால் தொடர்ந்து 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றிருக்கிறார். அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் வென்று அறையிருதில் வென்று இறுதி போட்டியில் வெல்லுமா இந்தியா? வெல்லும்...!!!
Nice information
ReplyDelete